/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
பாட்மின்டன்: சாதிப்பாரா லக்சயா சென்
/
பாட்மின்டன்: சாதிப்பாரா லக்சயா சென்
ADDED : ஆக 03, 2024 11:43 PM

பாரிஸ்: பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இன்று இந்தியாவின் லக்சயா சென், டென்மார்க்கின் ஆக்சல்சென் மோதுகின்றனர்.
பாரிஸ் ஒலிம்பிக் பாட்மின்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி இன்று நடக்கிறது. இதில் உலகின் 'நம்பர்-22' இந்தியாவின் லக்சயா சென் 22, உலகின் 'நம்பர்-2' டென்மார்க்கின் விக்டர் ஆக்சல்சென் 30, மோதுகின்றனர்.
காலிறுதியில் சீனதைபேயின் சோ டியென் செனை வீழ்த்திய லக்சயா சென், ஒலிம்பிக் பாட்மின்டன் ஒற்றையரில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர், மூன்றாவது இந்தியர் என்ற வரலாறு படைத்தார். உலக சாம்பியன்ஷிப் (2021) போட்டியில் வெண்கலம் வென்ற லக்சயா சென், பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டில் (2022) தங்கத்தை தட்டிச் சென்றார். இன்று மீண்டும் அசத்தினால் ஒலிம்பிக் பாட்மின்டன் ஒற்றையரில் பைனலுக்கு முன்னேறிய முதல் இந்திய வீரராகலாம். தவிர இந்தியாவுக்கு ஒரு பதக்கத்தை உறுதி செய்யலாம்.
ஒலிம்பிக்கில் 2 (2016ல் வெண்கலம், 2020ல் தங்கம்), உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 3 (2014ல் வெண்கலம், 2017, 2020ல் தங்கம்) பதக்கம் வென்ற ஆக்சல்சென், நடப்பு ஆண்டில் மலேசிய மாஸ்டர்ஸ் தொடரில் மட்டும் சாம்பியன் ஆனார்.
சர்வதேச அரங்கில் இருவரும் 8 முறை மோதினர். இதில் ஆக்சல்சென் 7, லக்சயா சென் ஒரு முறை வெற்றி பெற்றனர்.