sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பாட்மின்டன்

/

சிந்து '450' * பாட்மின்டன் அரங்கில் அசத்தல்

/

சிந்து '450' * பாட்மின்டன் அரங்கில் அசத்தல்

சிந்து '450' * பாட்மின்டன் அரங்கில் அசத்தல்

சிந்து '450' * பாட்மின்டன் அரங்கில் அசத்தல்


ADDED : மே 22, 2024 11:12 PM

Google News

ADDED : மே 22, 2024 11:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோலாலம்பூர்: உலக பாட்மின்டனில் 450வது வெற்றி பெற்றார் இந்தியாவின் சிந்து.

மலேசியாவில் மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இத்தொடரின் 'நம்பர்-5' வீராங்கனை, இந்தியாவின் சிந்து, ஸ்காட்லாந்தின் கிறிஸ்டி கில்மரை சந்தித்தார். முதல் செட்டை சிந்து 21-17 என கைப்பற்றினார். தொடர்ந்து அசத்திய இவர், அடுத்த செட்டையும் 21-16 என வசப்படுத்தினார். முடிவில் சிந்து 21-17, 21-16 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

450 வது வெற்றி

சர்வதேச பாட்மின்டன் அரங்கில் 14 வது இடத்திலுள்ள சிந்து, நேற்று தனது 450வது வெற்றியை (203 தோல்வி) பதிவு செய்தார். இதற்கு முன் 6 நட்சத்திரங்கள் இதுபோல சாதித்துள்ளனர்.

அஷ்மிதா அபாரம்

மற்றொரு ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் அஷ்மிதா, லின் சிக் யுன் (சீன தைபே) மோதினர். இதில் அஷ்மிதா 21-17, 21-16 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இந்தியாவின் உன்னாதி, 13-21, 18-21 என காவோ பங்கிடம் தோல்வியடைந்தார்.

கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் இந்திய தம்பதி சுமீத் ரெட்டி-சிக்கி ரெட்டி, 21-15, 12-21, 21-17 என்ற கணக்கில் போராடி வெற்றி பெற்றது. ஆண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் கிருஷ்ண பிரசாத், சாய் பிரதீக் ஜோடி 21-21, 21-11 என்ற செட் கணக்கில் சீன தைபேவின் மிங் செ லு, டங் கெய் வய் ஜோடியை வீழ்த்தியது.






      Dinamalar
      Follow us