sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பாட்மின்டன்

/

பாட்மின்டன்: காலிறுதியில் சிந்து

/

பாட்மின்டன்: காலிறுதியில் சிந்து

பாட்மின்டன்: காலிறுதியில் சிந்து

பாட்மின்டன்: காலிறுதியில் சிந்து


ADDED : மே 23, 2024 10:40 PM

Google News

ADDED : மே 23, 2024 10:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோலாலம்பூர்: மலேசிய பாட்மின்டன் தொடரின் காலிறுதிக்குள் நுழைந்தார் சிந்து.

மலேசியாவில் மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இத்தொடரின் 'நம்பர்-5' வீராங்கனை, இந்தியாவின் சிந்து, தென் கொரியாவின் யு ஜின் சிம்மை எதிர்கொண்டார். முதல் செட்டை சிந்து 21-13 என எளிதாக கைப்பற்றினார். இரண்டாவது செட்டை 12-21 என நழுவவிட்டார்.

மூன்றாவது செட்டை 21-14 என வசப்படுத்தினார். முடிவில் சிந்து 21-13, 12-21, 21-14 என வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் இளம் வீராங்கனை அஷ்மிதா (53வது இடம்), உலகின் 'நம்பர்-10' வீராங்கனை, அமெரிக்காவின் பெய்வென் ஜங்கை சந்தித்தார். இதில் அஷ்மிதா 21-19, 16-21, 21-12 என வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார்.

கலப்பு இரட்டையர் இரண்டாவது சுற்றில் இந்திய தம்பதி சுமீத் ரெட்டி-சிக்கி ரெட்டி, 9-21, 15-21 என மலேசியாவின் செங் டங், டோ வெய் ஜோடியிடம் தோற்றது.

பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் திரீஷா-காயத்ரி ஜோடி 18-21, 22-20, 14-21 என தென் கொரியாவின் சியன் ஹய், சங் ஷூவோ ஜோடியிடம் வீழ்ந்தது.






      Dinamalar
      Follow us