sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பாட்மின்டன்

/

பாட்மின்டன்: காலிறுதியில் ஸ்ரீகாந்த்

/

பாட்மின்டன்: காலிறுதியில் ஸ்ரீகாந்த்

பாட்மின்டன்: காலிறுதியில் ஸ்ரீகாந்த்

பாட்மின்டன்: காலிறுதியில் ஸ்ரீகாந்த்


ADDED : மார் 22, 2024 10:44 PM

Google News

ADDED : மார் 22, 2024 10:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பசல்: சுவிட்சர்லாந்து பாட்மின்டனில் சிந்து, லக்சயா தோல்வியடைந்தனர்.

சுவிட்சர்லாந்தின் 'சுவிஸ் ஓபன் சூப்பர் 300' பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சிந்து, ஜப்பானின் மியாசகியை சந்தித்தார். இதன் முதல் செட்டை 21-16 என வென்ற சிந்து, அடுத்த இரு செட்டுகளை கோட்டை விட்டார். முடிவில் சிந்து 21-16, 19-21, 16-21 என தோல்வியடைந்தார்.

ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், இத்தொடரின் 'நம்பர்-1' வீரர், மலேசியாவின் லீ ஜியாவை சந்தித்தார். இதில் ஸ்ரீகாந்த் 21-16, 21-15 என நேர் செட்டில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு வீரர் லக்சயா சென், 17-21, 15-21 என தென் கொரியாவின் சியா ஹாவோவிடம் தோல்வியடைந்தார். இந்தியாவின் பிரியான்ஷு ராவத், 21-14, 21-13 என சீனாவின் லெய் ஜியை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார். இந்திய வீரர் கிரண் ஜார்ஜ் 18-21, 22-20, 21-18 என பிரான்சின் அலெக்சை வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறினார்.

பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் திரீஷா, காயத்ரி ஜோடி, காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சக இந்தியாவின் பிரியா, ஸ்ருதி ஜோடியை 21-10, 21-12 என வென்று காலிறுதிக்கு முன்னேறியது.






      Dinamalar
      Follow us