தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பாட்மின்டன்/இந்தியாவிடம் வீழ்ந்தது மியான்மர் * ஆசிய அணிகள் பாட்மின்டனில்

இந்தியாவிடம் வீழ்ந்தது மியான்மர் * ஆசிய அணிகள் பாட்மின்டனில்

இந்தியாவிடம் வீழ்ந்தது மியான்மர் * ஆசிய அணிகள் பாட்மின்டனில்


ADDED : பிப் 04, 2026 10:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 04, 2026 10:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குயிங்டாவோ: ஆசிய அணிகளுக்கான பாட்மின்டன் முதல் போட்டியில் இந்திய ஆண், பெண்கள் அணிகள் வெற்றி பெற்றன.

சீனாவில் ஆசிய அணிகளுக்கான பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இந்திய பெண்கள் அணி 'ஒய்' பிரிவில் தாய்லாந்து, மியான்மருடன் இடம் பெற்றுள்ளது. நேற்று தனது முதல் போட்டியில் இந்தியா, மியான்மரை எதிர்கொண்டது. முதலில் நடந்த பெண்கள் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் தான்வி சர்மா, 21-13, 21-16 என மியான்மரின் துஸ்ஹரை வீழ்த்தினார்.

இரண்டாவது ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் ரக்சித்தா ஸ்ரீ, 21-12, 21-6 என சிர்பூவை வென்றார். மாளவிகா, 21-9, 21-12 என லின் டினை சாய்த்தார்.

இரட்டையர் பிரிவு முதல் போட்டியில் இந்தியாவின் பிரியா, சுருதி ஜோடி 21-15, 21-16 என சு லாட், துஸ்ஹர் ஜோடியை வென்றது. திரீஷா, காயத்ரி ஜோடி 21-8, 21-6 என லின் லின், சிர்பூ ஜோடியை வீழ்த்தியது. முடிவில் இந்திய அணி 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

'திரில்' வெற்றி

இந்திய ஆண்கள் அணி 'சி' பிரிவில் சிங்கப்பூர், ஜப்பானுடன் இடம் பெற்றுள்ளது. நேற்று தனது முதல் போட்டியில் இந்தியா, சிங்கப்பூரை எதிர்கொண்டது. முதல் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் லக்சயா சென், 16-21, 21-19, 16-21 என வீழ்ந்தார். அடுத்து நடந்த ஆண்கள் இரட்டையர் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, 21-10, 21-8 என எளிதாக வென்றது.

இரண்டாவது ஒற்றையரில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, 21-17, 21-15 என வென்றார். இரண்டாவது இரட்டையர் போட்டியில் இந்தியாவின் புருத்வி, சாய் பிரதீக் ஜோடி 21-8, 21-23, 20-22 என போராடி தோற்க, ஸ்கோர் 2-2 என ஆனது.

கடைசியாக நடந்த ஒற்றையர் போட்டியில் ஸ்ரீகாந்த், 21-15, 21-16 என ஜியா வெய்யை வீழ்த்தினார். முடிவில் இந்தியா 3-2 என 'திரில்' வெற்றி பெற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us