/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
இந்திய ஜோடிக்கு வெள்ளி * பாரா பாட்மின்டனில் முதன் முறையாக...
/
இந்திய ஜோடிக்கு வெள்ளி * பாரா பாட்மின்டனில் முதன் முறையாக...
இந்திய ஜோடிக்கு வெள்ளி * பாரா பாட்மின்டனில் முதன் முறையாக...
இந்திய ஜோடிக்கு வெள்ளி * பாரா பாட்மின்டனில் முதன் முறையாக...
ADDED : பிப் 13, 2026 10:55 PM

ரிபா: பஹ்ரைனில் பாரா பாட்மின்டன் உலக சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதன் 'வீல் சேர்' கலப்பு இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் பிரேம் குமார், ஆல்பியா ஜோடி, சீனாவின் ஜிம்போ, லியு யுடங் ஜோடியை சந்தித்தது. இதில் இந்திய ஜோடி 6-21, 4-21 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்து, வெள்ளிப்பதக்கம் பெற்றது.
இதையடுத்து பாரா பாட்மின்டன் உலக சாம்பியன்ஷிப், 'வீல் சேர்' பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய ஜோடி என, பிரேம் குமார், ஆல்பியா வரலாறு படைத்தனர்.
பைனலில் மணிஷா
பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் மணிஷா (தமிழகம்), பிரான்சின் மவுடு லெபர்ட்டை சந்தித்தார். இதில் மணிஷா 21-17, 21-15 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறினார்.