/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
காலிறுதியில் லக்சயா, ஆயுஷ் * ஆஸி., ஓபன் பாட்மின்டனில்...
/
காலிறுதியில் லக்சயா, ஆயுஷ் * ஆஸி., ஓபன் பாட்மின்டனில்...
காலிறுதியில் லக்சயா, ஆயுஷ் * ஆஸி., ஓபன் பாட்மின்டனில்...
காலிறுதியில் லக்சயா, ஆயுஷ் * ஆஸி., ஓபன் பாட்மின்டனில்...
ADDED : நவ 20, 2025 11:00 PM

சிட்னி: ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் காலிறுதிக்கு இந்தியாவின் லக்சயா, ஆயுஷ் முன்னேறினர்.
சிட்னியில், 'சூப்பர் 500' அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், தைவானின் யு சென் சியை சந்தித்தார். முதல் செட்டை 21-17 என வென்ற லக்சயா, அடுத்த செட்டை 13-21 என இழந்தார்.
3வது, கடைசி செட்டில் அசத்திய லக்சயா 21-13 என வென்று பதிலடி கொடுத்தார். முடிவில் லக்சயா 21-17, 13-21, 21-13 என வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, 21-17, 21-16 என ஜப்பானின் நரவோகாவை வென்று காலிறுதிக்குள் நுழைந்தார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இத்தொடரின் 'நம்பர்-1' அந்தஸ்து பெற்ற இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, 21-18, 21-11 என தைவானின் சிங் ஹெங், குவான் உ ஜோடியை வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறியது.
பிரனாய் ஏமாற்றம்
ஆண்கள் ஒற்றையர் 2வது சுற்றில் இந்தியாவின் பிரனாய், இந்தோனேஷியாவின் பர்ஹானிடம் 19-21, 10-21 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தார். இந்தியாவின் ஸ்ரீகாந்த், 20-22, 16-21 என ஜப்பானின் ஒஹவாவிடம் தோல்வியடைந்தார்.

