/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
இரண்டாவது சுற்றில் சிந்து * டென்மார்க் ஓபன் பாட்மின்டனில்...
/
இரண்டாவது சுற்றில் சிந்து * டென்மார்க் ஓபன் பாட்மின்டனில்...
இரண்டாவது சுற்றில் சிந்து * டென்மார்க் ஓபன் பாட்மின்டனில்...
இரண்டாவது சுற்றில் சிந்து * டென்மார்க் ஓபன் பாட்மின்டனில்...
ADDED : அக் 15, 2024 10:53 PM

ஓடென்ஸ்: டென்மார்க் பாட்மின்டன் இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தார் இந்தியாவின் சிந்து.
டென்மார்க்கில் சர்வதேச பாட்மின்டன் தொடர் நேற்று துவங்கியது. பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் சிந்து, சீன தைபேவின் போ பாய் யுவை எதிர்கொண்டார். முதல் செட்டை சிந்து 21-8 என எளிதாக கைப்பற்றினார். அடுத்து நடந்த இரண்டாவது சுற்றில் சிந்து, 13-7 என முன்னிலையில் இருந்தார். அப்போது காயம் காரணமாக பாய் யு விலகிக் கொள்ள, சிந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஆகர்ஷி, 13-21, 12-21 என தாய்லாந்தின் சுபனிதாவிடம் தோல்வியடைந்தார். இந்தியாவின் மாளவிகா, 13-21, 12-21 என சீன வீராங்கனை நிகுவேனிடம் வீழ்ந்தார்.
லக்சயா ஏமாற்றம்
ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், சீனாவின் லு குவாங் ஜுவை சந்தித்தார். முதல் செட்டை லக்சயா சென் 21-12 என கைப்பற்றினார். பின் அடுத்த செட்டை இவர், 19-21 என போராடி இழந்தார்.
மூன்றாவது, கடைசி செட்டில் 14-21 என கோட்டை விட்டார். முடிவில் லக்சயா சென், 21-12, 19-21, 14-21 என்ற செட்டில் தோல்வியடைந்தார்.