உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூன் 09, 2026 11:15 PM

அ நிறம் | அளவு
சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் சர்வதேச பாட்மின்டன் தொடர் நேற்று துவங்கியது. இதன் ஆண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் அர்ஜுன், ஹரிஹரன் ஜோடி, அமெரிக்காவின் ஸ்டான்லே ஜிங், ஆர்டன் குவான் லீ ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை இந்திய ஜோடி 21-13 என கைப்பற்றியது; தொடர்ந்து அசத்திய இந்திய ஜோடி அடுத்த செட்டையும் 21-13 என வசப்படுத்தியது.
27 நிமிடம் மட்டும் நடந்த போட்டி முடிவில் இந்திய ஜோடி 21-13, 21-13 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.
ஆண்கள் ஒற்றையர் தகுதிச்சுற்று இரண்டாவது போட்டியில் இந்தியாவின் சனீத் தயானந்த், 21-9, 21-16 என மலேசியாவின் மின் ஹாங் லிமை வீழ்த்தி, பிரதான சுற்றுக்கு முன்னேறினார்.
