தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பாட்மின்டன்/இரண்டாவது சுற்றில் சிந்து: ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டனில்

இரண்டாவது சுற்றில் சிந்து: ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டனில்

இரண்டாவது சுற்றில் சிந்து: ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டனில்


ADDED : ஜூன் 10, 2026 09:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 10, 2026 09:43 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிட்னி: ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் 2வது சுற்றுக்கு இந்தியாவின் சிந்து, தான்வி சர்மா உள்ளிட்டோர் முன்னேறினர்.

சிட்னியில், 'சூப்பர் 500' அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சிந்து, பெருவின் லுாசியா காஸ்டிலோ சலாசர் மோதினர். அபாரமாக ஆடிய சிந்து 21-13, 21-11 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் தான்வி சர்மா, செக்குடியரசின் சியு பின்-சியான் மோதினர். இதில் தான்வி சர்மா 21-12, 22-20 என வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். இந்தியாவின் மாளவிகா பன்சோத் 15-21, 21-7, 21-13 என, தாய்லாந்தின் டோன்ருக் சேஹெங்கை வீழ்த்தினார்.

மற்றொரு முதல் சுற்றில் இந்தியாவின் இஷாராணி பருவா 22-20, 10-21, 21-14 என சீனாவின் ஹான் கியான்ஜியை தோற்கடித்தார். இந்தியாவின் தன்யா ஹேம்நாத் 21-17, 21-18 என, அமெரிக்காவின் இஷிகா ஜெய்ஸ்வாலை வென்றார். இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப் 19-21, 21-19, 20-22 என, அமெரிக்காவின் லிங் சிங் வோங்கிடம் போராடி தோல்வியடைந்தார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ், அமெரிக்காவின் ஜஸ்டின் ஹோ மோதினர். இதில் ஏமாற்றிய கிரண் ஜார்ஜ் 19-21, 21-14, 15-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இந்தியாவின் தருண் 21-18, 13-21, 23-25 என, சீனதைபேயின் சுன்-யி லின்னிடம் வீழ்ந்தார்.

கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் துருவ் ரவாத், மணீஷா ஜோடி 21-13, 21-14 என, ஆஸ்திரேலியாவின் லிம் ஜெய்டன், விக்டோரியா ஜோடியை வீழ்த்தியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us