/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
உன்னதி, தான்விக்கு 'ஷாக்' * தேசிய சீனியர் பாட்மின்டனில்...
/
உன்னதி, தான்விக்கு 'ஷாக்' * தேசிய சீனியர் பாட்மின்டனில்...
உன்னதி, தான்விக்கு 'ஷாக்' * தேசிய சீனியர் பாட்மின்டனில்...
உன்னதி, தான்விக்கு 'ஷாக்' * தேசிய சீனியர் பாட்மின்டனில்...
ADDED : டிச 26, 2025 11:07 PM

விஜயவாடா: தேசிய பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் உன்னதி, தான்வி தோல்வியடைந்தனர்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில், சீனியர் தேசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் 87வது சீசன் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் உலக ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்ற தான்வி சர்மா, ரக்சித்தா ஸ்ரீ மோதினர். இதில் தான்வி 21-16,, 14-21, 18-21 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
மற்றொரு காலிறுதியில் முன்னணி வீராங்கனை உன்னதி ஹூடா, 12-21, 15-21 என்ற நேர் செட் கணக்கில் சூர்யா கரிஷ்மாவிடம் வீழ்ந்தார்.
ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில் கிரண் ஜார்ஜ், 21-18, 21-18 என ரவுனக் சவுகானை வென்றார். தருண் மன்னெப்பள்ளி, 21-13, 22-20 என பாரத்தை வீழ்த்தினார்.
பெண்கள் இரட்டையரில் இத்தொடரின் 'நம்பர்-1' அந்தஸ்து பெற்ற ருதுபர்ணா, ஸ்வேதாபர்ணா ஜோடி, காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரிதுவர்ஷினி, சானியா ஜோடியிடம் தோற்று, வெளியேறியது.