/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
சாத்விக்-சிராக் ஜோடி வெற்றி * இந்தியன் ஓபன் பாட்மின்டனில்
/
சாத்விக்-சிராக் ஜோடி வெற்றி * இந்தியன் ஓபன் பாட்மின்டனில்
சாத்விக்-சிராக் ஜோடி வெற்றி * இந்தியன் ஓபன் பாட்மின்டனில்
சாத்விக்-சிராக் ஜோடி வெற்றி * இந்தியன் ஓபன் பாட்மின்டனில்
ADDED : ஜன 14, 2025 10:05 PM

புதுடில்லி: இந்தியன் ஓபன் பாட்மின்டன் முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி வெற்றி பெற்றது.
இந்திய ஓபன் 'சூப்பர் 750' பாட்மின்டன் தொடர் நேற்று டில்லியில் துவங்கியது. பெண்கள் ஒற்றையரில் ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கம் (வெள்ளி, வெண்கலம்) வென்ற இந்தியாவின் சிந்து, முதல் சுற்றில் தைவானின் ஷுவோ யங் சங்கை எதிர்கொண்டார். முதல் செட்டை சிந்து 21-14 என கைப்பற்றினார்.
இரண்டாவது செட் இழுபறி ஆனது. ஒருகட்டத்தில் 20-20 என இருந்தது. பின் அடுத்தடுத்து இரு கேம்களை வசப்படுத்திய சிந்து, 22-20 என செட்டை கைப்பற்றினார். முடிவில் சிந்து 21-14, 22-20 என வெற்றி பெற்றார்.
ஆண்கள் அபாரம்
ஆண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி, மலேசியாவின் வெய் சோங், கெய் உன் ஜோடியை சந்தித்தது. இதில் இந்திய ஜோடி 23-21, 19-21, 21-16 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
பெண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் திரீஷா, காயத்ரி ஜோடி, 21-23, 19-21 என ஜப்பானின் இகராஷி, சுகுரமோட்டோ ஜோடியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது.
ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ், 21-19, 14-21, 27-25 என ஜப்பான் வீரர் டனாகாவை போராடி வென்றார்.