sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 06, 2025 ,கார்த்திகை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பாட்மின்டன்

/

பாட்மின்டன்: அரையிறுதியில் தான்வி

/

பாட்மின்டன்: அரையிறுதியில் தான்வி

பாட்மின்டன்: அரையிறுதியில் தான்வி

பாட்மின்டன்: அரையிறுதியில் தான்வி


ADDED : டிச 05, 2025 11:49 PM

Google News

ADDED : டிச 05, 2025 11:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கவுகாத்தி: அசாமின் கவுகாத்தியில், 'சூப்பர் 100' அந்தஸ்து பெற்ற மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் தான்வி சர்மா, சக வீராங்கனை தான்யாவை எதிர்கொண்டார்.

முதல் செட்டை தான்வி 21-17 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டை, நீண்ட போராட்டத்துக்குப் பின் 27-25 என தான்வி வசப்படுத்தினார். 44 நிமிடம் நடந்த போட்டி முடிவில் தான்வி 21-17, 27-25 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, அரையிறுதிக்குள் நுழைந்தார்.

மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் அனுபமா, 21-19, 6-21, 12-21 என, சக வீராங்கனை அஷ்மிதாவிடம் தோல்வி அடைந்தார். மற்ற காலிறுதி போட்டிகளில் இந்தியாவின் இஷாராணி, தஸ்னிம் மிர் தோல்வியடைந்தனர்.

ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் துஷார் சுவீர், 21-14, 21-11 என மலேசியாவின் முகமது யூசுப்பை வென்று, அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் தருண் 11-21, 18-21 என மலேசியாவின் டிரையான்ஷாவிடம் தோல்வியடைந்தார். இந்தியாவின் சங்கர், 15-21, 21-13, 22-20 என சக வீரர் சனீத் தயானந்தை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறினார்.

ஆண்கள் இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் சாய் பிரதீக், புருத்வி ஜோடி 22-20, 21-18 என மலேசியாவின் இ ஷெங், லிம் ஜியான் ஜோடியை வென்றது.






      Dinamalar
      Follow us