ADDED : ஆக 04, 2026 11:07 PM

நம்புரு: கொரிய ஓபன் முதல் சுற்றில் இந்தியாவின் புருத்வி, கிருஷ்ண பிரசாத் ஜோடி வெற்றி பெற்றது.
தென் கொரியாவில் 'கொரியா மாஸ்டர்ஸ்' பாட்மின்டன் தொடர் நேற்று துவங்கியது. ஆண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் புருத்வி, கிருஷ்ண பிரசாத் ஜோடி, இத்தொடரின் 'நம்பர்-4' அந்தஸ்து பெற்ற தாய்லாந்தின் வோராபோல், சலோயம்பான் ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை இந்திய ஜோடி 21-16 என வென்றது. தொடர்ந்து அடுத்த செட்டையும் 21-18 என கைப்பற்றியது. 42 நிமிடம் நடந்த போட்டி முடிவில் இந்திய ஜோடி 21-16, 21-18 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றது.
பெண்கள் இரட்டையர் போட்டியில் இந்தியாவின் ஸ்ருதி, பிரியா ஜோடி, 15-21, 13-21 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பானின் ஹிராமோடோ, இஷிகவா ஜோடியிடம் வீழ்ந்தது.
ஆண்கள் ஒற்றையர் தகுதிச்சுற்று, இரண்டாவது போட்டியில் இந்தியாவின் சுவீர், 10-21, 17-21 என்ற செட் கணக்கில் ஜப்பானின் ஓகவாவிடம் தோல்வியடைந்தார்.
