/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
இந்திய ஜோடி அபாரம் * ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில்...
/
இந்திய ஜோடி அபாரம் * ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில்...
இந்திய ஜோடி அபாரம் * ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில்...
இந்திய ஜோடி அபாரம் * ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில்...
ADDED : ஏப் 10, 2025 10:48 PM

நிங்போ: பாட்மின்டன் ஆசிய சாம்பியன்ஷிப் காலிறுதிக்கு இந்தியாவின் தனிஷா, துருவ் ஜோடி தகுதி பெற்றது.
சீனாவில் பாட்மின்டன் ஆசிய சாம்பியன்ஷிப் 42வது சீசன் நடக்கிறது. கலப்பு இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் தனிஷா, துருவ் ஜோடி, தைவானின் ஹாங் வெய், நிக்கோல் ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 12-21 என இழந்த இந்திய ஜோடி அடுத்த இரு செட்டுகளை 21-16, 21-18 என வசப்படுத்தியது. முடிவில் இந்திய ஜோடி 12-21, 21-16, 21-18 என வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தது.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஆஷித் சூர்யா, அம்ருதா ஜோடி, 11-21, 14-21 என சீனாவின் ஜியாங், வெய் ஜோடியிடம் தோற்றது.
ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ், 21-19, 13-21, 16-21 என தாய்லாந்தின் விதித்சர்னிடம் தோற்றார். மற்றொரு வீரர் பிரியான்ஷ், 14-21, 17-21 என்ற கணக்கில் ஜப்பானின் நரோகாவிடம் வீழ்ந்தார்.
சிந்து ஏமாற்றம்
பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சிந்து ('நம்பர்-17'), 3 வது இடத்திலுள்ள ஜப்பானின் யமாகுச்சி மோதினர். இதில் சிந்து 11-21, 21-16, 16-21 என தோல்வியடைந்தார்.