/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
சிந்து, லக்சயா பின்னடைவு * பாட்மின்டன் தரவரிசையில்...
/
சிந்து, லக்சயா பின்னடைவு * பாட்மின்டன் தரவரிசையில்...
சிந்து, லக்சயா பின்னடைவு * பாட்மின்டன் தரவரிசையில்...
சிந்து, லக்சயா பின்னடைவு * பாட்மின்டன் தரவரிசையில்...
ADDED : ஏப் 15, 2025 09:31 PM

புதுடில்லி: சர்வதேச பாட்மின்டன் கூட்டமைப்பு சார்பில் புதிய தரவரிசை பட்டியல் வெளியானது. பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் சிந்து, ஒரு இடம் பின்தங்கி, 18 வது இடம் பிடித்தார். சமீபத்திய சீன தொடரில் இரண்டாவது சுற்றில் தோற்றதால் இந்நிலை ஏற்பட்டது. மாளவிகா (22), ரக்சித்தா ஸ்ரீ (42), அனுபமா (44), ஆகர்ஷி (49) உள்ளிட்டோர் 'டாப்-50' பட்டியலில் உள்ளனர்.
ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் லக்சயா சென், 2 இடம் பின்தங்கி, 18வது இடம் பெற்றார். பிரனாய் 30 வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் திரீஷா-காயத்ரி ஜோடி, சீனாவில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கவில்லை. இதனால் 9வது இடத்தில் இருந்து 10 வது இடம் பெற்றது. தனிஷா-அஷ்வினி ஜோடி 22வது இடத்தில் நீடிக்கிறது.
கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் துருவ் கபிலா-தனிஷா கிராஸ்டோ ஜோடி, ஒரு இடம் முந்தி, முதன் முறையாக 17வது இடம் பிடித்தது. ஆண்கள் இரட்டையரில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, 11வது இடத்தில் உள்ளது.