
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்தான்: சர்வதேச பாட்மின்டன் அரங்கில் முதன் முறையாக சாம்பியன் ஆனார் இந்தியாவின் தான்வி ரெட்டி.
வங்கதேசத்தில் சர்வதேச பாட்மின்டன் சீரிஸ் நடந்தது. பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் தான்வி ரெட்டி, இத்தொடரின் 'நம்பர்-1', மலேசியாவின் லெர் குய் இங்கை 21-9, 21-14 என வென்றார்.
அடுத்து நடந்த பைனலில் தான்வி ரெட்டி, இத்தொடரின் 'நம்பர்-2' வீராங்கனை மலேசியாவின் லிம் ஜி ஷினை எதிர்கொண்டார். முதல் செட்டில் போராடிய தான்வி, 21-19 என வசப்படுத்தினார்.
இரண்டாவது செட்டில் சிறப்பாக செயல்பட்ட தான்வி ரெட்டி 21-9 என எளிதாக கைப்பற்றினார்.
முடிவில் தான்வி ரெட்டி 21-19, 21-9 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். சர்வதேச பாட்மின்டன் அரங்கில் முதன் முறையாக கோப்பை வென்றார்.

