/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
பாட்மின்டன்: அன்மோல் அசத்தல்
/
பாட்மின்டன்: அன்மோல் அசத்தல்
ADDED : அக் 10, 2025 10:51 PM

வன்ட்டா: சர்வதேச பாட்மின்டன் 'சூப்பர்-500' தொடரில் முதன் முறையாக அரையிறுதிக்கு முன்னேறினார் அன்மோல் கார்ப்.
பின்லாந்தில் ஆர்டிக் ஓபன் சர்வதேச 'சூப்பர்-500' அந்தஸ்து பெற்ற பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் காலிறுதியில் 62 வது இடத்திலுள்ள இந்தியாவின் அன்மோல் கார்ப், 'நம்பர்-63' ஆக உள்ள டென்மார்க்கின் அமலியை எதிர்கொண்டார்.
முதல் செட்டை அன்மோல் 21-15 என கைப்பற்றினார். தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட இவர், அடுத்த செட்டை 21-14 என வசப்படுத்தினார்.
36 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் அன்மோல் 21-15, 21-14 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, 'சூப்பர்-500' தொடரில் முதன் முறையாக அரையிறுதிக்கு முன்னேறினார்.
கலப்பு இரட்டையர் காலிறுதியில், இத்தொடரின் 'நம்பர்-8', இந்தியாவின் தனிஷா, துருவ் கபிலா ஜோடி, 'நம்பர்-1' அந்தஸ்து பெற்ற சீனாவின் ஜியாங் ஜென், வெய் யா ஜின் ஜோடியை சந்தித்தது. இதில் இந்திய ஜோடி, 21-7, 21-10 என வீழ்ந்தது.