தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பாட்மின்டன்/ 'நம்பர்-6' வீரரை வென்ற ரவுனக் * யு.எஸ்., ஓபன் பாட்மின்டனில்...

'நம்பர்-6' வீரரை வென்ற ரவுனக் * யு.எஸ்., ஓபன் பாட்மின்டனில்...

'நம்பர்-6' வீரரை வென்ற ரவுனக் * யு.எஸ்., ஓபன் பாட்மின்டனில்...


ADDED : ஜூன் 26, 2026 11:05 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 26, 2026 11:05 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புல்லெர்டன்: உலகின் 'நம்பர்-6' வீரர் தியன் செனை, இந்தியாவின் ரவுனக் வீழ்த்தினார்.

அமெரிக்காவில் யு.எஸ்., ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில், 80வது இடத்திலுள்ள இந்தியாவின் ரவுனக் சவுகான், உலகின் 'நம்பர்-6' வீரர், சீன தைபேவின் சோ தியன் செனை எதிர்கொண்டார்.

தகுதிச்சுற்றில் இருந்து முன்னேறிய, 18 வயது ரவுனக், முதல் செட்டை 21-17 என கைப்பற்றினார். இரண்டாவது செட் இழுபறியானது. போராடிய ரவுனக், 26-24 என வசப்படுத்தினார்.

49 நிமிடம் நடந்த போட்டியில் ரவுனக் 21-17, 26-24 என வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.

இந்தியாவின் ஸ்ரீகாந்த், 21-14, 21-13 என மலேசியாவின் லீயை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

தான்வி அபாரம்

பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இத்தொடரில் 'நம்பர்-5' அந்தஸ்து பெற்ற இந்தியாவின் தான்வி சர்மா, சீன தைபேவின் டங் சியுவை சந்தித்தார். இதில் தான்வி 21-12, 21-19 என வென்று காலிறுதிக்குள் நுழைந்தார்.

மற்ற போட்டிகளில் இந்தியாவின் தேவிகா, ரக்சித்தா வெற்றி பெற்று, காலிறுதிக்கு தகுதி பெற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us