இரண்டாவது சுற்றில் தான்வி * யு.எஸ்., ஓபன் பாட்மின்டனில்
இரண்டாவது சுற்றில் தான்வி * யு.எஸ்., ஓபன் பாட்மின்டனில்
ADDED : ஜூன் 25, 2026 11:21 PM

புல்லெர்டன்: யு.எஸ்., ஓபன் பாட்மின்டன் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார் தான்வி சர்மா.
அமெரிக்காவில் யு.எஸ்., ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இத்தொடரில் 'நம்பர்-5' அந்தஸ்து பெற்ற இந்தியாவின் தான்வி சர்மா, ஜெர்மனியின் யுவேனே லியை சந்தித்தார். முதல் செட்டை 23-21 என போராடி வென்றர் தான்வி. தொடர்ந்து அடுத்த செட்டை 21-16 என கைப்பற்றினார். 40 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் தான்வி சர்மா, 23-21, 21-16 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஆகர்ஷி, 9-21, 17-21 என சீன தைபேவின் சியு டாங்கிடம் தோல்வியடைந்தார். இந்தியாவின் அன்மோல் கார்ப், 15-21, 15-21 என பல்கேரியாவின் கலோயனாவிடம் தோற்றார். தான்யா 11-21, 13-21 என ஜப்பானின் கன்ஜியிடம் வீழ்ந்தார்.
ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில், இந்தியாவின் ஸ்ரீகாந்த், 21-14, 21-12 என சக வீரர் சனீத்தை வென்றார். தகுதிபோட்டியில் இருந்து வந்த இந்தியாவின் ரவுனக் சவுகான், சக வீரர் சங்கர் முத்துசாமியை 23-21, 21-16 என வீழ்த்தினார்.
கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் துருவ், மணீஷா ஜோடி 21-15, 21-16 என இந்தோனேஷியாவின் இஷான், செரினா ஜோடியை வென்றது.
