/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
இரண்டாவது சுற்றில் இந்திய ஜோடி * சிங்கப்பூர் பாட்மின்டனில்...
/
இரண்டாவது சுற்றில் இந்திய ஜோடி * சிங்கப்பூர் பாட்மின்டனில்...
இரண்டாவது சுற்றில் இந்திய ஜோடி * சிங்கப்பூர் பாட்மின்டனில்...
இரண்டாவது சுற்றில் இந்திய ஜோடி * சிங்கப்பூர் பாட்மின்டனில்...
ADDED : மே 28, 2025 10:50 PM

சிங்கப்பூர்: சிங்கப்பூர் பாட்மின்டன் ஆண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி வெற்றி பெற்றது.
சிங்கப்பூரில் சர்வதேச பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி ('நம்பர்-27'), மலேசியாவின் ஹோன் ஜியான், முகமது ஹைக்கல் ஜோடியை ('நம்பர்-41') சந்தித்தது. இதில் இந்திய ஜோடி 21-16, 21-13 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.
ஆண்கள் முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், சீன தைபே வீரர் லின் சன் மோதினர். இதில் லக்சயா 21-15, 17-21, 5-13 என்ற நிலையில் இருந்த போது முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகிக் கொண்டார்.
கலப்பு இரட்டையரில் இந்தியாவின் ரோஹன் கபூர், ருத்விகா ஷிவானி ஜோடி, 21-16, 21-19 என அமெரிக்காவின் சென் ஜி, பிரான்செஸ்கா ஜோடியை வீழ்த்தி, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழைந்தது.
பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் திரீஷா, காயத்ரி ஜோடி 21-14, 19-21, 21-17 என சீன தைபேவின் சங், யங் ஜோடியை வீழ்த்தியது.
பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் ஆகர்ஷி, 21-17, 13-21, 7-21 என சீனாவின் ஹான் இயிடம் வீழ்ந்தார். மற்றொரு போட்டியில் உன்னதி, 13-21, 21-9, 15-21 என சீனாவின் வாங்கிடம் தோற்றார்.