/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
திரிஷா-காயத்ரி அபாரம் * சையது மோடி பாட்மின்டனில்
/
திரிஷா-காயத்ரி அபாரம் * சையது மோடி பாட்மின்டனில்
ADDED : நவ 25, 2025 11:12 PM

லக்னோ: சையது மோடி பாட்மின்டன் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இந்தியாவின் திரிஷா 22, காயத்ரி 22, ஜோடி முன்னேறியது.
இந்தியாவின் லக்னோவில் சையது மோடி சர்வதேச பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் இரட்டையர் முதல் சுற்றில், நடப்பு சாம்பியன், இந்தியாவின் திரிஷா, காயத்ரி ஜோடி, மலேசியாவின் சு சங், ஜிங் இ டனை எதிர்கொண்டது. முதல் செட்டை இந்திய ஜோடி 19-21 என இழந்தது. இரண்டாவது செட்டில் போராடிய இந்திய ஜோடி 22-20 என கைப்பற்றியது. தொடர்ந்து, மூன்றாவது, கடைசி செட்டை 21-9 என வசப்படுத்தியது. முடிவில் இந்திய ஜோடி 19-21, 22-20, 21-9 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஷ்ருதி, பிரியா ஜோடி 21-8, 21-11 என்ற நேர் செட்டில், இந்தியாவின் ரீவா, சம்ரிதி ஜோடியை வென்றது.
ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அர்ஜுன், ஹரிஹரன் ஜோடி 21-11, 21-13 என்ற கணக்கில் இந்தியாவின் மகிஜா, சுஜேஸ் ஜோடியை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் இந்தியாவின் சாய் பிரதீக், புருத்வி ஜோடி 21-8, 21-17 என்ற நேர் செட்டில் இந்தியாவின் நிபிர் ரஞ்சன், சுவர்ணராஜ் ஜோடியை வென்றது.

