/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
இந்திய ஜோடி ஏமாற்றம் * வேர்ல்டு டூர் பாட்மின்டனில்
/
இந்திய ஜோடி ஏமாற்றம் * வேர்ல்டு டூர் பாட்மின்டனில்
இந்திய ஜோடி ஏமாற்றம் * வேர்ல்டு டூர் பாட்மின்டனில்
இந்திய ஜோடி ஏமாற்றம் * வேர்ல்டு டூர் பாட்மின்டனில்
ADDED : டிச 11, 2024 10:41 PM

ஹாங்சு: சீனாவில் பாட்மின்டன் வேர்ல்டு டூர் பைனல்ஸ் தொடர் நேற்று துவங்கியது. உலகின் முன்னணி நட்சத்திரங்கள் மட்டும் பங்கேற்பர். உலகத் தரவரிசையில் 'நம்பர்-8' ஆக உள்ள இந்தியாவின் திரீசா, காயத்ரி ஜோடி பெண்கள் இரட்டையர் பிரிவில் பங்கேற்கிறது. இதில் 'ஏ' பிரிவில் இடம் பெற்ற இந்திய ஜோடி, 3 போட்டியில் பங்கேற்கும். பட்டியலில் முதல் இரு இடம் பிடித்தால் அரையிறுதிக்கு செல்லலாம்.
நேற்று தனது முதல் போட்டியில் உலகின் 'நம்பர்-1', சீனாவின் லியு ஷெங், டான் நிங் ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை இந்திய ஜோடி 22-20 என கைப்பற்றியது. இரண்டாவது செட்டில் துவக்கத்தில் 14-18 என பின்தங்கிய இந்திய ஜோடி, பின் 20-20 என்ற முன்னேறியது. கடைசி நேரத்தில் ஏமாற்ற 20-22 என செட்டை இழந்தது.
அடுத்து நடந்த மூன்றாவது செட்டை 14-21 என எளிதாக கோட்டை விட்டது. முடிவில் இந்திய ஜோடி 22-20, 20-22, 14-21 என தோல்வியடைந்தது. இன்று தனது இரண்டாவது போட்டியில் 'நம்பர்-6' ஆக உள்ள மலேசியாவின் டான் பியர்லி, தினா ஜோடியை சந்திக்கிறது.