sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 05, 2026 ,மாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பாட்மின்டன்

/

திரீசா-காயத்ரி ஜோடி வெற்றி * வேர்ல்டு டூர் பாட்மின்டனில்

/

திரீசா-காயத்ரி ஜோடி வெற்றி * வேர்ல்டு டூர் பாட்மின்டனில்

திரீசா-காயத்ரி ஜோடி வெற்றி * வேர்ல்டு டூர் பாட்மின்டனில்

திரீசா-காயத்ரி ஜோடி வெற்றி * வேர்ல்டு டூர் பாட்மின்டனில்


ADDED : டிச 12, 2024 11:06 PM

Google News

ADDED : டிச 12, 2024 11:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹாங்சு: பாட்மின்டன் வேர்ல்டு டூர் இரண்டாவது போட்டியில் இந்தியாவின் திரீசா-காயத்ரி ஜோடி வெற்றி பெற்றது.

சீனாவில் பாட்மின்டன் வேர்ல்டு டூர் பைனல்ஸ் தொடர் நடக்கிறது. உலகத் தரவரிசையில் 'டாப்-8' பட்டியலில் உள்ள நட்சத்திரங்கள் மட்டும் பங்கேற்கின்றனர். 'நம்பர்-8' ஆக உள்ள இந்தியாவின் திரீசா, காயத்ரி ஜோடி பெண்கள் இரட்டையரில் 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ளது. 3 போட்டியில் பங்கேற்கும். பட்டியலில் முதல் இரு இடம் பிடித்தால் அரையிறுதிக்கு செல்லலாம்.

முதல் போட்டியின் சீன ஜோடியிடம் தோற்ற இந்திய ஜோடி, நேற்று தனது இரண்டாவது போட்டியில் 'நம்பர்-6' ஆக உள்ள மலேசியாவின் டான் பியர்லி, தினா ஜோடியை சந்தித்தது.

இதில் வென்றால் மட்டும் அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க முடியும் என்ற நிலையில் முதல் செட்டை இந்திய ஜோடி 21-19 என கைப்பற்றியது. இரண்டாவது செட்டில் இந்திய ஜோடி 5-8 என பின்தங்கியது. பின் சுதாரித்த இந்திய ஜோடி, 18-17 என முந்தியது. ஒரு கட்டத்தில் ஸ்கோர் 19-19 என ஆனது. அடுத்து இரு 'கேம்களை' தொடர்ந்து கைப்பற்றிய இந்திய ஜோடி, இரண்டாவது செட்டை 21-19 என வசப்படுத்தியது.

46 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் இந்திய ஜோடி 21-19, 21-19 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றது. இன்று தனது மூன்றாவது, கடைசி போட்டியில் ஜப்பானின் நாமி மட்சுயமா, சிஹாரு ஷிதா ஜோடியை சந்திக்கிறது. இதில் வென்றால் அரையிறுதிக்கு முன்னேறலாம்.






      Dinamalar
      Follow us