/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
சீன பாட்மின்டன்: மாளவிகா ஏமாற்றம்
/
சீன பாட்மின்டன்: மாளவிகா ஏமாற்றம்
ADDED : செப் 20, 2024 10:26 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாங்சூ: சீன ஓபன் பாட்மின்டன் காலிறுதியில் இந்தியாவின் மாளவிகா தோல்வியடைந்தார்.
சீனாவில், 'சூப்பர் 1000' அந்தஸ்து பெற்ற சீன ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில், உலகின் 'நம்பர்-43' இந்தியாவின் மாளவிகா பன்சோத், 5வது இடத்தில் உள்ள ஜப்பானின் அகானே யமகுச்சி மோதினர்.
முதல் செட்டை 10-21 என இழந்த மாளவிகா, இரண்டாவது செட்டை 16-21 எனக் கோட்டைவிட்டார். மொத்தம் 35 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய மாளவிகா 10-21, 16-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.நாக்பூரை சேர்ந்த மாளவிகா 22, அகானே யமகுச்சிக்கு எதிராக தொடர்ச்சியாக 3வது தோல்வியை பெற்றார்.