/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
டென்மார்க் பாட்மின்டன்: சிந்து ஏமாற்றம்
/
டென்மார்க் பாட்மின்டன்: சிந்து ஏமாற்றம்
ADDED : அக் 18, 2024 09:42 PM

ஓடென்ஸ்: டென்மார்க் ஓபன் பாட்மின்டன் காலிறுதியில் இந்தியாவின் சிந்து தோல்வியடைந்தார்.
டென்மார்க்கில், 'சூப்பர் 750' அந்தஸ்து பெற்ற டென்மார்க் ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சிந்து, இந்தோனேஷியாவின் கிரிகோரியா மரிஸ்கா துஞ்சங் மோதினர். முதல் செட்டை 13-21 என இழந்த சிந்து, பின் எழுச்சி கண்டு இரண்டாவது செட்டை 21-16 எனக் கைப்பற்றி பதிலடி கொடுத்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் சொதப்பிய இவர் 9-21 எனக்கோட்டைவிட்டார்.
மொத்தம் 57 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய சிந்து 13-21, 21-16, 9-21 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார். இத்தொடரில் இந்திய நட்சத்திரங்களின் பங்களிப்பு முடிவுக்கு வந்தது. ஏற்கனவே இந்தியாவின் லக்சயா சென், சதிஷ் குமார், மாளவிகா, காயத்ரி, திரீசா உள்ளிட்டோர் தோல்வியை தழுவினர்.