sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பாட்மின்டன்

/

கோப்பை வென்றார் தேவிகா: தாய்லாந்து மாஸ்டர்ஸ் பாட்மின்டனில்

/

கோப்பை வென்றார் தேவிகா: தாய்லாந்து மாஸ்டர்ஸ் பாட்மின்டனில்

கோப்பை வென்றார் தேவிகா: தாய்லாந்து மாஸ்டர்ஸ் பாட்மின்டனில்

கோப்பை வென்றார் தேவிகா: தாய்லாந்து மாஸ்டர்ஸ் பாட்மின்டனில்

1


ADDED : பிப் 01, 2026 11:18 PM

Google News

1

ADDED : பிப் 01, 2026 11:18 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாங்காக்: தாய்லாந்து மாஸ்டர்ஸ் பாட்மின்டன் ஒற்றையரில் இந்திய வீராங்கனை தேவிகா சிஹாக் சாம்பியன் பட்டம் வென்றார்.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், 'சூப்பர் 300' அந்தஸ்து பெற்ற மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடந்தது. பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், உலகின் 'நம்பர்-63' இந்தியாவின் தேவிகா சிஹாக் 20, உலகின் 'நம்பர்-68' வீராங்கனையான மலேசியாவின் கோ ஜின் வெய் 26, மோதினர். முதல் செட்டை 21-8 எனக் கைப்பற்றிய தேவிகா, 2வது செட்டில் 6-3 என முன்னிலையில் இருந்த போது, தொடையின் பின்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் மலேசிய வீராங்கனை பாதியில் விலகினார். இதனையடுத்து தேவிகா சிஹாக் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

ஹரியானாவை சேர்ந்த தேவிகா சிஹாக், கடந்த ஆண்டு இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் தொடரின் பைனல் வரை சென்ற 2வது இடம் பிடித்தார். தவிர இவர், கடந்த ஆண்டு ஜெர்மனியில் நடந்த உலக பல்கலை விளையாட்டு, பாட்மின்டன் கலப்பு அணிகள் பிரிவில் வெண்கலம் வென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார்.






      Dinamalar
      Follow us