தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பாட்மின்டன்/இங்கிலாந்து பாட்மின்டன்: சிந்து சந்தேகம்

இங்கிலாந்து பாட்மின்டன்: சிந்து சந்தேகம்

இங்கிலாந்து பாட்மின்டன்: சிந்து சந்தேகம்


ADDED : மார் 02, 2026 10:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2026 10:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பர்மிங்காம்: துபாயில் உள்ள இந்திய வீராங்கனை சிந்து, ஆல் இங்கிலாந்து ஓபன் பாட்மின்டன் தொடரில் பங்கேற்பது சந்தேகம்.

பர்மிங்காமில், ஆல் இங்கிலாந்து ஓபன் பாட்மின்டன் தொடர் இன்று துவங்குகிறது. இதன் பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் சிந்து பங்கேற்க இருந்தார். தற்போது துபாயில் உள்ள இவர், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, விமான மூடப்பட்டதால், இத்தொடரில் விளையாட வாய்ப்பில்லை.

ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் லக்சயா சென், ஆயுஷ் ஷெட்டி களமிறங்குகின்றனர். இதில் லக்சயா, முதல் சுற்றில் உலகின் 'நம்பர்-1' சீனாவின் ஷி யூ கியை சந்திக்கிறார். ஆயுஷ் ஷெட்டி, இந்தோனேஷியாவின் ஆல்வி பர்ஹானை எதிர்கொள்கிறார்.

பெண்கள் ஒற்றையரில் மாளவிகா பன்சோத், உன்னதி ஹூடா, ஆண்கள் இரட்டையரில் சாத்விக்சாய்ராஜ்-சிராக் ஷெட்டி, பெண்கள் இரட்டையரில் திரிசா-காயத்ரி கோபிசந்த், கலப்பு இரட்டையரில் துருவ் கபிலா-தனிஷா கிராஸ்டோ, ரோஹன் கபூர்-ருத்விகா ஷிவானி களமிறங்குகின்றனர்.

பிரகாஷ் படுகோன் (1980), கோபிசந்த் (2001) ஆகியோருக்கு பின், இத்தொடரில் இந்திய நட்சத்திரங்கள் சாம்பியன் பட்டம் வென்றதில்லை. இந்தியாவின் செய்னா நேவல் (2015), லக்சயா (2022) பைனல் வரை சென்று 2வது இடம் பிடித்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us