/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி: ஆசிய ஜூனியர் பாட்மின்டனில்
/
இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி: ஆசிய ஜூனியர் பாட்மின்டனில்
இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி: ஆசிய ஜூனியர் பாட்மின்டனில்
இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி: ஆசிய ஜூனியர் பாட்மின்டனில்
ADDED : ஜூலை 20, 2025 11:23 PM

சோலோ: ஆசிய ஜூனியர் பாட்மின்டன் லீக் போட்டியில் ஹாங்காங்கை வீழ்த்திய இந்தியா, 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றது.
இந்தோனேஷியாவில், ஆசிய ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் (கலப்பு அணி) தொடர் நடக்கிறது. இதன் 'டி' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, ஹாங்காங் அணிகள் மோதின.
ஆண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் இந்தியாவின் ராஜுலு ராமு, ஹாங்காங்கின் சம் யாவ் மோதினர். இதில் ராஜுலு 11-8 என வெற்றி பெற்றார். பெண்கள் ஒற்றையர் போட்டியில் தன்வி சர்மா (இந்தியா) 11-5 என அனா ஹோய் கியுவை (ஹாங்காங்) தோற்கடித்தார்.
முடிவில் இந்திய அணி 110-100 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. முதலிரண்டு லீக் போட்டியில் இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்சை வீழ்த்திய இந்தியா, 'ஹாட்ரிக்' வெற்றியுடன் 'டி' பிரிவில் முதலிடத்தை கைப்பற்றியது. காலிறுதியில், 'ஏ' பிரிவில் 2வது இடம் பிடித்த ஜப்பானை எதிர்கொள்கிறது இந்தியா.