/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
கொரிய பாட்மின்டன்: கிரண் ஜார்ஜ் வெற்றி
/
கொரிய பாட்மின்டன்: கிரண் ஜார்ஜ் வெற்றி
ADDED : நவ 06, 2024 09:33 PM

இக்சன் சிட்டி: கொரிய மாஸ்டர்ஸ் பாட்மின்டன் முதல் சுற்றில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ் வெற்றி பெற்றார்.க்ஷ
தென் கொரியாவில், 'சூப்பர் 300' அந்தஸ்து பெற்ற மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ், வியட்நாமின் ஹாய் டாங் நுயென் மோதினர். முதல் செட்டை 15-21 என இழந்த கிரண் ஜார்ஜ், பின் எழுச்சி கண்டு இரண்டாவது செட்டை 21-12 எனக் கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் மீண்டும் அசத்திய இவர், 21-15 என தன்வசப்படுத்தினார்.
மொத்தம் 57 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய கிரண் ஜார்ஜ் 15-21, 21-12, 21-15 என்ற கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். இதில் சீனதைபேயின் சி யு ஜென்னை எதிர்கொள்கிறார்.