/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
மாஸ்டர்ஸ் பாட்மின்டன்: ரித்விக் 'சாம்பியன்'
/
மாஸ்டர்ஸ் பாட்மின்டன்: ரித்விக் 'சாம்பியன்'
ADDED : டிச 15, 2024 11:17 PM

கட்டாக்: ஒடிசா மாஸ்டர்ஸ் பாட்மின்டன் ஒற்றையரில் இந்தியாவின் ரித்விக் சஞ்ஜீவி சாம்பியன் பட்டம் வென்றார்.
ஒடிசா மாநிலம் கட்டாக்கில், 'சூப்பர் 100' அந்தஸ்து பெற்ற மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடந்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் தருண், ரித்விக் சஞ்ஜீவி சதிஷ் குமார் மோதினர். முதல் செட்டை 21-18 எனக் கைப்பற்றிய ரித்விக், இரண்டாவது செட்டை 21-16 என தன்வசப்படுத்தினார்.
மொத்தம் 43 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய ரித்விக் சஞ்ஜீவி 21-18, 21-16 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
பெண்கள் ஒற்றையர் பைனலில் இந்தியாவின் தன்வி சர்மா, சீனாவின் கெய் யான் யான் மோதினர். இதில் ஏமாற்றிய தன்வி 14-21, 16-21 என தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தார்.