/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
ஒடிசா பாட்மின்டன்: அரையிறுதியில் உன்னதி
/
ஒடிசா பாட்மின்டன்: அரையிறுதியில் உன்னதி
ADDED : டிச 12, 2025 11:04 PM

கட்டாக்: ஒடிசா மாஸ்டர்ஸ் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு அரையிறுதிக்கு இந்தியாவின் உன்னதி ஹூடா முன்னேறினார்.
ஒடிசா மாநிலம் கட்டாக்கில், 'சூப்பர் 100' அந்தஸ்து பெற்ற மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் உன்னதி ஹூடா 18, அனுபமா 20, மோதினர். இதில் உன்னதி 21-16, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்குள் நுழைந்தார்.
மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் தான்வி சர்மா 16, தன்யா ஹேம்நாத் 22, மோதினர். இதில் ஏமாற்றிய தான்வி 18-21, 17-21 என தோல்வியடைந்து வெளியேறினார். இந்தியாவின் தஸ்னிம் மிர் 21-19, 21-6 என, சீனதைபேயின் சியோ-டோங் டங்கை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இந்தியாவின் இஷாராணி 21-16, 21-14 என, சகவீராங்கனை அன்மோல் கார்ப்பை தோற்கடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ் 21-11, 21-17 என சகவீரர் ரித்விக் சஞ்ஜீவி சதிஷ் குமாரை வென்றார். மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் தருண் 9-21, 20-22 என, இந்தோனேஷியாவின் முகமது யூசுப்பிடம் தோல்வியடைந்தார். இந்தியாவின் சங்கர் முத்துசாமி 19-21, 20-22 என, சகவீரர் ரவுனக் சவுகானிடம் வீழ்ந்தார்.

