/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
ஒடிசா பாட்மின்டன்: பைனலில் உன்னதி
/
ஒடிசா பாட்மின்டன்: பைனலில் உன்னதி
ADDED : டிச 13, 2025 10:25 PM

கட்டாக்: ஒடிசா பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு பைனலுக்கு இந்தியாவின் உன்னதி ஹூடா, இஷாராணி முன்னேறினர்.
ஒடிசா மாநிலம் கட்டாக்கில், 'சூப்பர் 100' அந்தஸ்து பெற்ற மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் உன்னதி ஹூடா 18, தஸ்னிம் மிர் 20, மோதினர். ஒரு மணி நேரம் நீடித்த போட்டியில் அசத்திய உன்னதி 18-21, 21-16, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார்.
மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் இஷாராணி 21, தன்யா ஹேம்நாத் 22, மோதினர். இதில் இஷாராணி 18-21, 21-7, 21-7 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ் 25, ரவுனக் சவுகான் 18, மோதினர். இதில் கிரண் 21-19, 8-21, 21-18 என வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார். இதில் இந்தோனேஷியாவின் முகமது யூசுப்பை சந்திக்கிறார்.

