UPDATED : ஜூலை 14, 2025 11:12 PM
ADDED : ஜூலை 14, 2025 12:14 AM

புதுடில்லி: இந்தியாவின் செய்னா, காஷ்யப் ஜோடி விவாகரத்து செய்ய உள்ளது.
இந்திய
பாட்மின்டன் வீராங்கனை செய்னா நேவல் 35. ஒலிம்பிக் (வெண்கலம், 2012), உலக
சாம்பியன்ஷிப் (2015ல் வெள்ளி, 2017ல் வெண்கலம்), காமன்வெல்த் விளையாட்டு
(2010, 18ல் தங்கம்) தனிநபர் பிரிவில் பதக்கம் வென்றார். தெலுங்கானாவை
சேர்ந்த இவர், 2018ல் (டிசம்பர் 14) சகவீரரான காஷ்யப்பை திருமணம் செய்தார்.
இருவரும், ஐதராபாத்தில் உள்ள கோபிசந்த் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டனர்.
இந்நிலையில் தனது கணவர் காஷ்யப்பை பிரிய போவதாக சமூகவலைதளத்தில் செய்னா பதிவிட்டுள்ளார். இதற்கான காரணம் கூறவில்லை.
இதுகுறித்து
செய்னா வெளியிட்ட செய்தியில், 'வாழ்க்கை சில நேரங்களில் நம்கை வெவ்வேறு
திசையில் அழைத்துச் செல்கிறது. நீண்ட ஆலோசனைக்கு பின் நானும், காஷ்யப்பும்
பிரிய முடிவு செய்துள்ளோம்,' என தெரிவித்திருந்தார்.