/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
சாத்விக்-சிராக் அபாரம்: இந்தோனேஷிய பாட்மின்டனில்
/
சாத்விக்-சிராக் அபாரம்: இந்தோனேஷிய பாட்மின்டனில்
ADDED : ஜன 21, 2025 10:00 PM

ஜகார்த்தா: இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பாட்மின்டன் முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக், சிராக் ஜோடி வெற்றி பெற்றது.
இந்தோனேஷியாவில், மாஸ்டர்ஸ் 'சூப்பர் 500' பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, சீனதைபேயின் சென் ஜி ரே, லின் யு சீ ஜோடியை சந்தித்தது. அபாரமாக ஆடிய சாத்விக், சிராக் ஜோடி 21-16, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றது.
பெண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் அஷ்வினி பொன்னப்பா, தனிஷா கிராஸ்டோ ஜோடி 21-6, 21-14 என்ற கணக்கில் தாய்லாந்தின் ஆர்னிச்சா, சுகித்தா சுவாசாய் ஜோடியை வீழ்த்தியது.
ஆண்கள் ஒற்றையர் தகுதிச் சுற்றில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி 21-7, 21-15 என்ற நேர் செட் கணக்கில் சகவீரர் ஸ்ரீகாந்தை வீழ்த்தி, பிரதான சுற்றுக்குள் நுழைந்தார். பெண்கள் ஒற்றையர் தகுதிச் சுற்றில் இந்தியாவின் தன்யா ஹேம்நாத் 16-21, 21-17, 21-15 என சீனதைபேயின் துங் சியோ-டோங்கை தோற்கடித்து பிரதான சுற்றுக்கு முன்னேறினார்.