/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
பிரதான சுற்றில் சங்கர் * தாய்லாந்து பாட்மின்டனில்...
/
பிரதான சுற்றில் சங்கர் * தாய்லாந்து பாட்மின்டனில்...
பிரதான சுற்றில் சங்கர் * தாய்லாந்து பாட்மின்டனில்...
பிரதான சுற்றில் சங்கர் * தாய்லாந்து பாட்மின்டனில்...
ADDED : ஜன 30, 2024 09:59 PM

பாங்காங்க்: தாய்லாந்து பாட்மின்டன் தொடரின் பிரதான சுற்றுக்கு இந்தியாவின் சங்கர் முத்துசாமி முன்னேறினர்.
தாய்லாந்தில் சர்வதேச பாட்மின்டன் தொடர் நேற்று துவங்கியது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு தகுதிச்சுற்று, முதல் போட்டியில் இந்தியாவின் சங்கர் முத்துசாமி, இந்தோனேஷியாவின் சுகியர்டோவை 9-21, 21-17, 21-12 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். அடுத்து நடந்த இரண்டாவது போட்டியில் சங்கர், தாய்லாந்தின் கோரகிரிட்டை 20-22, 21-10, 21-14 என சாய்த்து, பிரதான சுற்றுக்கு முன்னேறினார்.
இந்தியாவின் சமீர் வர்மா, முதல் போட்டியில் அமெரிக்காவின் ஹோவர்டை (21-9, 21-16) வென்றார். பின் நடந்த இரண்டாவது போட்டியில் சமீர் வர்மா, சீன தைபே வீரர் குவான் லினை (16-21, 21-16, 21-15) வென்று, முக்கிய சுற்றுக்கு தகுதி பெற்றார்.
பெண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் திரிஷா, காயத்ரி ஜோடி 16-21, 21-10, 21-18 என ஹாங்காங்கின் வின்யங், லோக் ஜோடியை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் இந்தியாவின் அஷ்வினி, தனிஷா ஜோடி 21-13, 21-17 என சீன தைபேவின் ஜியாவோ மின், லிங் பங் ஜோடியை சாய்த்தது.