/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
சிந்து, லக்சயா சென் வெற்றி: சையது மோடி பாட்மின்டனில்
/
சிந்து, லக்சயா சென் வெற்றி: சையது மோடி பாட்மின்டனில்
சிந்து, லக்சயா சென் வெற்றி: சையது மோடி பாட்மின்டனில்
சிந்து, லக்சயா சென் வெற்றி: சையது மோடி பாட்மின்டனில்
ADDED : நவ 27, 2024 09:01 PM

லக்னோ: சையது மோடி பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சிந்து, லக்சயா சென் வெற்றி பெற்றனர்.
லக்னோவில், சையது மோடி இந்தியா சர்வதேச பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சிந்து, அன்மோல் கார்ப் மோதினர். அபாரமாக ஆடிய சிந்து 21-17, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் உன்னாதி ஹூடா 21-12, 21-16 என தாய்லாந்தின் தமோன்வானை வீழ்த்தினார். இந்தியாவின் அனுபமா 19-21, 22-20, 21-15 என அஜர்பைஜானின் கீஷா பாத்திமாவை தோற்கடித்தார்.
மற்ற முதல் சுற்று போட்டிகளில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், இரா சர்மா, தஸ்னிம் மிர், தேவிகா, ஸ்ரியான்ஷி வெற்றி பெற்றனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், மலேசியாவின் ஷோலே அடில் மோதினர். இதில் லக்சயா சென் 21-12, 21-12 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ் 21-12, 23-21 என சகவீரர் அலாப் மிஷ்ராவை தோற்கடித்தார். இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி 21-18, 15-21, 21-16 என சகவீரர் ரகு மாரிசாமியை வீழ்த்தினார்.
பெண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் அஷ்வினி பொன்னப்பா, தனிஷா கிராஸ்டோ ஜோடி 21-12, 21-10 என சகநாட்டை சேர்ந்த இஷு மாலிக், தானு மாலிக் ஜோடியை வென்றது.