தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பாட்மின்டன்/சாதிப்பாரா சிந்து: இந்திய ஓபன் பாட்மின்டனில்

சாதிப்பாரா சிந்து: இந்திய ஓபன் பாட்மின்டனில்

சாதிப்பாரா சிந்து: இந்திய ஓபன் பாட்மின்டனில்


ADDED : ஜன 12, 2026 07:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 12, 2026 07:32 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: இந்திய ஓபன் பாட்மின்டனில் சிந்து, லக்சயா சென் சாதிக்க காத்திருக்கின்றனர்.

டில்லியில், இந்திய ஓபன் 'சூப்பர் 750' பாட்மின்டன் தொடர் ஜன. 13-18ல் நடக்கவுள்ளது. இந்தியா சார்பில் சிந்து, லக்சயா சென், ஆயுஷ் ஷெட்டி, ஸ்ரீகாந்த், மாளவிகா, சாத்விக், சிராக் ஷெட்டி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

கடந்த 2017ல் நடந்த இந்திய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற சிந்து, சமீபத்தில் முடிந்த மலேசிய ஓபனில் அரையிறுதி வரை சென்றிருந்தார். இவரது 'பார்ம்' தொடர்ந்தால், 9 ஆண்டுகளுக்கு பின் இத்தொடரில் சாம்பியன் ஆகலாம்.

இத்தொடரில் 2022ல் சாம்பியன் பட்டம் வென்ற லக்சயா சென், சமீபத்திய மலேசிய ஓபனில் ஏமாற்றினார். கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற இவர், முதல் சுற்றில் சகவீரர் ஆயுஷ் ஷெட்டியை சந்திக்கிறார். கடந்த ஆண்டு யு.எஸ்., ஓபனில் கோப்பை வென்ற ஆயுஷ், மலேசிய ஓபன் முதல் சுற்றில், பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மலேசியாவின் லீ ஜீ ஜியாவை வீழ்த்தினார்.

ஸ்ரீகாந்த், பிரனாய் ஆகியோரும் கோப்பை வெல்ல முயற்சிக்கலாம்.

பெண்கள் ஒற்றையரில் மாளவிகா, ஆண்கள் இரட்டையரில் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி, பெண்கள் இரட்டையரில் திரீசா, காயத்ரி கோபிசந்த் சாதிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us