/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
பாட்மின்டன்: இந்திய ஜோடி ஏமாற்றம்
/
பாட்மின்டன்: இந்திய ஜோடி ஏமாற்றம்
ADDED : ஜூன் 01, 2024 11:17 PM

சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஓபன் பாட்மின்டன் பெண்கள் இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் திரீசா-காயத்ரி ஜோடி தோல்வியடைந்தது.
சிங்கப்பூரில் சர்வதேச பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் இரட்டையர் அரையிறுதியில், உலகத் தரவரிசையில் 'நம்பர்-30' வது இடத்திலுள்ள இந்தியாவின் திரீசா, காயத்ரி ஜோடி, 4வது இடத்திலுள்ள ஜப்பானின் நாமி மட்சுயமா, சிஹாரு ஷிதா ஜோடியை எதிர்கொண்டது.
இரண்டாவது சுற்றில் உலகின் 'நம்பர்-2' (தென் கொரியா), காலிறுதியில் 'நம்பர்-6' (தென் கொரியா) ஜோடியை வீழ்த்தியது. இம்முறை அசத்தினால் 'டாப்-10' ஜோடிக்கு எதிராக 'ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்யலாம் என்ற நம்பிக்கையுடன் இந்திய ஜோடி களமிறங்கியது.
முதல் செட்டில் 5-10 என பின் தங்கிய இந்திய ஜோடி, பின் போராடி 16-16 என்ற நிலைக்கு சென்றது. ஒரு கட்டத்தில் ஸ்கோர் 21-21 என ஆனது. கடைசி நேரத்தில் 2 'கேம்களை' இழந்த இந்திய ஜோடி, முதல் செட்டை 21-23 என நழுவவிட்டது. இரண்டாவது செட்டில் எவ்வித எதிர்ப்பும் இன்றி இந்திய ஜோடி (11-21) சரண் அடைந்தது.
47 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் இந்திய ஜோடி 21-23, 11-21 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தது.