உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூன் 28, 2026 11:37 PM

அ நிறம் | அளவு
புல்லெர்டன்: யு.எஸ்., ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு பைனலுக்கு இந்தியாவின் ஸ்ரீகாந்த் முன்னேறினார்.
அமெரிக்காவில், 'சூப்பர் 300' அந்தஸ்து பெற்ற யு.எஸ்., ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், ஜப்பானின் யுடாய் ஓகிமோட்டோ மோதினர். இதில் ஸ்ரீகாந்த் 22-20, 15-21, 21-19 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார்.
மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் ரவுனக் சவுகான், சீனதைபேயின் லி யங் சு மோதினர். இதில் ரவுனக் 17-21, 19-21 என தோல்வியடைந்தார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் தேவிகா சிஹாக், டென்மார்க்கின் லைன் கிறிஸ்டோபர்சன் மோதினர். இதில் தேவிகா 21-15, 11-21, 15-21 என தோல்வியடைந்தார்.
