/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
சையது மோடி பாட்மின்டன்: பைனலில் சிந்து
/
சையது மோடி பாட்மின்டன்: பைனலில் சிந்து
ADDED : நவ 30, 2024 09:45 PM

லக்னோ: சையது மோடி பாட்மின்டன் பைனலுக்கு இந்தியாவின் சிந்து முன்னேறினார்.
உ.பி., மாநிலம் லக்னோவில், 'சூப்பர் 300' அந்தஸ்து பெற்ற சையது மோடி இந்தியா சர்வதேச பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சிந்து, உன்னாதி ஹூடா மோதினர். அபாரமாக ஆடிய சிந்து 21-12, 21-9 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார்.
பெண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் திரிசா, காயத்ரி கோபிசந்த் ஜோடி 18-21, 21-18, 21-10 என்ற கணக்கில் தாய்லாந்தின் பென்யபா, நந்தகர்ன் ஜோடியை வீழ்த்தியது.
கலப்பு இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா கிராஸ்டோ ஜோடி 21-16, 21-15 என்ற நேர் செட் கணக்கில் சீனாவின் ஜு ஜி ஹாங், ஜியா யி யங் ஜோடியை வென்றது.
ஆண்கள் ஒற்றையர் அரையிறுதியில் இந்தியாவின் லக்சயா சென், ஜப்பானின் ஷோகோ ஒகாவா மோதினர். இதில் லக்சயா சென் 21-8, 21-14 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார்.
பெண்கள் இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் அஷ்வினி பொன்னப்பா, தனிஷா ஜோடி 21-14, 16-21, 13-21 என சீனாவின் லி ஜிங், லி கியான் ஜோடியிடம் தோல்வியடைந்தது.