ADDED : செப் 02, 2024 11:22 PM

புதுடில்லி: இந்திய பாட்மின்டன் வீராங்கனை செய்னா நேவல் 34. ஒலிம்பிக் பாட்மின்டனில் பதக்கம் (2012, வெண்கலம்) வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றவர்.
முன்னாள் உலகின் 'நம்பர்-1' வீராங்கனையான செய்னா, 24 சர்வதேச பட்டம் வென்றுள்ளார். கடைசியாக, கடந்த ஆண்டு சிங்கப்பூர் ஓபனில் பங்கேற்றார்.
செய்னா கூறுகையில்,'' முழங்கால் காயத்தால் அவதிப்படுகிறேன். 'ஆர்திரிட்டிஸ்' பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எட்டு முதல் 9 மணி நேரம் பயிற்சி மேற்கொள்வது சிரமமாக உள்ளது. உலகின் தலைசிறந்த வீராங்கனைகளுக்கு எதிராக விளையாட, இரண்டு மணி நேர பயிற்சி மட்டும் போதாது. ஒலிம்பிக்கில் பங்கேற்பது விளையாட்டு நட்சத்திரங்களின் கனவு. கடைசி இரண்டு ஒலிம்பிக்கில் (2021, 2024) பங்கேற்க முடியாமல் போனது ஏமாற்றம். எனது 9 வயதில் பாட்மின்டன் விளையாட துவங்கினேன். இத்தனை ஆண்டுகள் விளையாடியதை பெருமையாக கருதுகிறேன். ஓய்வு குறித்து யோசித்து வருகிறேன். இந்த ஆண்டுக்குள் ஓய்வு முடிவை அறிவிப்பேன்,''என்றார்.