sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 04, 2026 ,மாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

பெங்களூருவில் ஐ.பி.எல்., நடக்குமா * தேசிய பசுமை தீர்ப்பாயம் 'கிடுக்கிப்பிடி'

/

பெங்களூருவில் ஐ.பி.எல்., நடக்குமா * தேசிய பசுமை தீர்ப்பாயம் 'கிடுக்கிப்பிடி'

பெங்களூருவில் ஐ.பி.எல்., நடக்குமா * தேசிய பசுமை தீர்ப்பாயம் 'கிடுக்கிப்பிடி'

பெங்களூருவில் ஐ.பி.எல்., நடக்குமா * தேசிய பசுமை தீர்ப்பாயம் 'கிடுக்கிப்பிடி'


ADDED : ஏப் 05, 2024 10:04 PM

Google News

ADDED : ஏப் 05, 2024 10:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: 'கடும் தண்ணீர் பற்றாக்குறை நிலவும் சூழலிலும், பெங்களூருவில் ஐ.பி.எல்., போட்டி நடத்துவது எப்படி,' என, தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.

கர்நாடகாவில் தண்ணீர் பற்றாக்குறை நிலவும் நிலையில், பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் 3 ஐ.பி.எல்., போட்டி நடந்தன. போட்டி ஒன்றுக்கு 75,000 லிட்டர் தண்ணீர் செலவானது. அடுத்து ஏப். 15, மே 4, 12, 18 என இன்னும் 4 போட்டி நடக்கவுள்ளன.

இந்நிலையில், தேசிய பசுமை தீர்ப்பாயம் (என்.ஜி.டி.,) தானாக முன்வந்து விளக்கம் கேட்டுள்ளது. 'பெங்களூரு மைதானத்துக்கு தண்ணீர் எங்கிருந்து கிடைக்கிறது, எப்படி பயன்படுத்தப்படுகிறது,' போன்ற விபரங்களை தருமாறு, கர்நாடக கிரிக்கெட் சங்கம் (கே.எஸ்.சி.ஏ.,), மாநில நிர்வாகத்திடம் கேட்டுள்ளது. இதனால் மீதமுள்ள நான்கு போட்டிகள் நடக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது.

கே.எஸ்.சி.ஏ., தலைமை அதிகாரி சுபேந்து கோஷ் கூறுகையில், '' என்.ஜி.டி., கட்டுப்பாட்டின் கீழ், மைதானங்கள் வருமா என ஆராய்ந்து வருகிறோம். போட்டிகள் நடத்துவதில் சிக்கல் இருக்காது என நம்புகிறோம்,'' என்றார்.






      Dinamalar
      Follow us