/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு: 'டி-20' உலக கோப்பை தொடருக்கு
/
ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு: 'டி-20' உலக கோப்பை தொடருக்கு
ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு: 'டி-20' உலக கோப்பை தொடருக்கு
ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு: 'டி-20' உலக கோப்பை தொடருக்கு
ADDED : ஜன 01, 2026 10:24 PM

மெல்போர்ன்: 'டி-20' உலக கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் கம்மின்ஸ், ஹேசல்வுட் இடம் பெற்றுள்ளனர்.
இந்தியா, இலங்கையில், ஐ.சி.சி., 'டி-20' உலக கோப்பை (பிப். 7 - மார்ச் 8) 10வது சீசன் நடக்கவுள்ளது. 'நடப்பு சாம்பியன்' இந்தியா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட 20 அணிகள் பங்கேற்கின்றன. கடந்த 2021ல் கோப்பை வென்ற ஆஸ்திரேலியா, 'பி' பிரிவில் அயர்லாந்து, ஓமன், இலங்கை, ஜிம்பாப்வே அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.
இத்தொடருக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது. காயத்தில் இருந்து மீண்டு வரும் பாட் கம்மின்ஸ் (முதுகு பகுதி), ஜோஷ் ஹேசல்வுட் (தொடையின் பின்பகுதி), டிம் டேவிட் (தொடையின் பின்பகுதி) தேர்வாகினர். இவர்களது உடற்தகுதியை பொறுத்து, வரும் ஜன. 31ம் தேதிக்குள் அணியில் மாற்றம் செய்யப்படும். ஏற்கனவே 'டி-20' போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்த ஸ்டார்க் தேர்வாகவில்லை.
'சுழல்' வீரர்களான கூப்பர் கொனோலி, மாத்யூ குனேமன், ஆடம் ஜாம்பா இடம் பெற்றுள்ளனர். ஸ்டீவ் ஸ்மித் தேர்வு செய்யப்படவில்லை. கேப்டனாக மிட்சல் மார்ஷ் நீடிக்கிறார்.
ஆஸி., அணி: மிட்சல் மார்ஷ் (கேப்டன்), சேவியர் பார்ட்லெட், கூப்பர் கொனோலி, பாட் கம்மின்ஸ், டிம் டேவிட், கேமிரான் கிரீன், நாதன் எல்லிஸ், ஜோஷ் ஹேசல்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், மாத்யூ குனேமன், மேக்ஸ்வெல், மாத்யூ ஷார்ட், மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஆடம் ஜாம்பா.

