/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
திருப்பூர் அணிக்கு 2வது வெற்றி: சேலம் அணியை வீழ்த்தியது
/
திருப்பூர் அணிக்கு 2வது வெற்றி: சேலம் அணியை வீழ்த்தியது
திருப்பூர் அணிக்கு 2வது வெற்றி: சேலம் அணியை வீழ்த்தியது
திருப்பூர் அணிக்கு 2வது வெற்றி: சேலம் அணியை வீழ்த்தியது
ADDED : ஜூலை 21, 2024 11:42 PM

திருநெல்வேலி: சேலத்துக்கு எதிரான லீக் போட்டியில் அசத்திய திருப்பூர் அணி 51 ரன் வித்தியாசத்தில் 2வது வெற்றி பெற்றது.
திருநெல்வேலியில் நேற்று நடந்த டி.என்.பி.எல்., லீக் போட்டியில் திருப்பூர், சேலம் அணிகள் மோதின. 'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த திருப்பூர் அணிக்கு அமித் சாத்விக் (50) நல்ல துவக்கம் தந்தார். பாலசந்தர் அனிருத் (17), கேப்டன் ஷாய் கிஷோர் (12) நிலைக்கவில்லை. மறுமுனையில் அசத்திய துஷார் ரஹேஜா, 28 பந்தில் அரைசதம் எட்டினார். இவர், 79 ரன் விளாசினார். திருப்பூர் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 192 ரன் எடுத்தது. சேலம் அணி சார்பில் குரு சாயீ, பொய்யாமொழி தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
கடின இலக்கை விரட்டிய சேலம் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 141 ரன் மட்டும் எடுத்தது. ரவி ராஜன் (53*) அரைசதம் விளாசினார். திருப்பூர் அணி சார்பில் முகமது அலி 3, நடராஜன், அஜித் ராம் தலா 2 விக்கெட் சாய்த்தனர். ஆட்ட நாயகன் விருதை முகமது அலி வென்றார்.