/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
நியூசிலாந்து 'ஹாட்ரிக்' வெற்றி: வீழ்ந்தது இங்கிலாந்து அணி
/
நியூசிலாந்து 'ஹாட்ரிக்' வெற்றி: வீழ்ந்தது இங்கிலாந்து அணி
நியூசிலாந்து 'ஹாட்ரிக்' வெற்றி: வீழ்ந்தது இங்கிலாந்து அணி
நியூசிலாந்து 'ஹாட்ரிக்' வெற்றி: வீழ்ந்தது இங்கிலாந்து அணி
ADDED : நவ 01, 2025 09:35 PM

வெலிங்டன்: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணி 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றது.
நியூசிலாந்து சென்ற இங்கிலாந்து அணி 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் இரு போட்டியில் நியூசிலாந்து வென்றது. மூன்றாவது, கடைசி போட்டி ஹாமில்டனில் நடந்தது. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர் 'பவுலிங்' தேர்வு செய்தார்.
இங்கிலாந்து அணிக்கு ஸ்மித் (5), டக்கெட் (8) ஜோடி துவக்கம் தந்தது. ஜோ ரூட் (2), கேப்டன் ஹாரி புரூக் (6), பெத்தெல் (11) கைவிட, 44/5 என திணறியது. பட்லர் (38), கார்ஸ் (36) சற்று உதவினார். ஓவர்டன், 62 பந்தில் 68 ரன் எடுத்தார். இங்கிலாந்து அணி 40.2 ஓவரில் 222 ரன்னில் ஆல் அவுட்டானது. நியூசிலாந்தின் டிக்னெர் 4, டபி 3 விக்கெட் சாய்த்தனர்.
நியூசிலாந்து அணிக்கு கான்வே (34), ரச்சின் ரவிந்திரா (46) ஜோடி நல்ல துவக்கம் தந்தது. லதாம் (10), பிரேஸ்வெல் (13), சான்ட்னர் (27) விரைவில் அவுட்டாகினர். டேரில் மிட்சல் அதிகபட்சம் 44 ரன் எடுக்க, வெற்றி எளிதானது. நியூசிலாந்து அணி 44.4 ஓவரில் 226/8 ரன் எடுத்து, 2 விக்கெட்டில் வெற்றி பெற்றது. ஜாக் (14), டிக்னெர் (18) அவுட்டாகாமல் இருந்தனர். நியூசிலாந்து அணி 3-0 என்ற தொடரை முழுமையாக கைப்பற்றி, கோப்பை தட்டிச் சென்றது.

