ADDED : நவ 01, 2025 09:37 PM

சிட்னி: ஷ்ரேயஸ் ஐயர் உடல்நிலை சீராக இருப்பதால், 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார்.
சிட்னியில் நடந்த மூன்றாவது ஒரு நாள் போட்டியில் (அக். 25) இந்திய அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இதில் 'கேட்ச்' பிடித்த போது இந்திய துணை கேப்டன் ஷ்ரேயஸ் ஐயருக்கு இடது விலா எலும்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. 'ஸ்கேன்' பரிசோதனையில் இவரது மண்ணீரலில் ரத்தக்சிவு கண்டறியப்பட்டது. நவீன அறுவை சிகிச்சை முறையில் ரத்தக்கசிவு நிறுத்தப்பட்டது. விரைவாக உடல்நிலை தேறிய நிலையில், சிட்னியில் உள்ள மருத்துவமனையில் இருந்து நேற்று 'டிஸ்சார்ஜ்' ஆனார்.
இந்திய கிரிக்கெட் போர்டு வெளியிட்ட செய்தியில், 'ஷ்ரேயசின் உடல்நிலை சீராக உள்ளது. இவருக்கு சிறப்பான சிகிச்சை அளித்த சிட்னியின் கவ்ரோஷ் ஹாகிகி, இந்தியாவின் தின்ஷா பர்திவாலா உள்ளிட்ட மருத்து குழுவினருக்கு நன்றி. ஷ்ரேயஸ் ஐயர் தொடர்ந்து சிட்னியில் தங்கி மருத்துவ ஆலோசனை பெறுவார். பயணம் செய்யும் அளவுக்கு உடல்தகுதி பெற்ற பின் இந்தியா திரும்புவார்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

