ADDED : நவ 01, 2025 10:25 PM

கோவை: ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் தமிழக அணியின் பிரதோஷ் ரஞ்சன் பால் சதம் விளாசினார்.
இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் ரஞ்சி கோப்பை 91வது சீசன் நடக்கிறது. மொத்தம் 38 அணிகள் பங்கேற்கின்றன. கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லுாரி மைதானத்தில் நடக்கும் 'ஏ' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், 'நடப்பு சாம்பியன்' விதர்பா அணிகள் விளையாடுகின்றன.
'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த தமிழக அணிக்கு அதீஷ் (3), விமல் குமார் (2) ஏமாற்றினர். ஆன்ட்ரி சித்தார்த் (33) ஆறுதல் தந்தார். பின் இணைந்த பிரதோஷ் ரஞ்சன் பால், பாபா இந்திரஜித் ஜோடி கைகொடுத்தது. அபாரமாக ஆடிய பிரதோஷ் சதம் விளாசினார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த இந்திரஜித் அரைசதம் கடந்தார். நான்காவது விக்கெட்டுக்கு 179 ரன் சேர்த்த போது பிரதோஷ் (113) அவுட்டானார்.
ஆட்டநேர முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 252/4 ரன் எடுத்திருந்தது. இந்திரஜித் (94), ஷாருக்கான் (0) அவுட்டாகாமல் இருந்தனர்.

