/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ரிஷாப் பன்ட் அரைசதம்: வெற்றி பெறுமா இந்தியா 'ஏ'
/
ரிஷாப் பன்ட் அரைசதம்: வெற்றி பெறுமா இந்தியா 'ஏ'
ADDED : நவ 01, 2025 10:27 PM

பெங்களூரு: இந்தியா 'ஏ', தென் ஆப்ரிக்க 'ஏ' அணிகள் மோதும் அதிகாரப்பூர்வமற்ற முதல் டெஸ்ட் (4 நாள்) பெங்களூருவில் நடக்கிறது.
முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்க 'ஏ' 309, இந்தியா 'ஏ' 234 ரன் எடுத்தன. இரண்டாவது நாள் முடிவில் தென் ஆப்ரிக்க 'ஏ' அணி, இரண்டாவது இன்னிங்சில் 30/0 ரன் எடுத்து, 105 ரன் முன்னிலை பெற்றிருந்தது.
மூன்றாவது நாள் ஆட்டத்தில் ஹெர்மான் (12) முதலில் அவுட்டானார். லெசேகோ (37), ஜுபைர் (37), டிசெப்கோ (25) கைகொடுத்தனர். தென் ஆப்ரிக்க 'ஏ' அணி இரண்டாவது இன்னிங்சில் 199 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. சிபம்லா (17) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா 'ஏ' சார்பில் தனுஷ் 4, கம்போஜ் 3 விக்கெட் சாய்த்தனர்.
இரண்டாவது இன்னிங்சில் 275 ரன் எடுத்தால் வெற்றி என களமிறங்கியது இந்தியா 'ஏ'. சாய் சுதர்சன் (13), ஆயுஷ் மாத்ரே (6), தேவ்தத் படிக்கல் (5) அடுத்தடுத்து அவுட்டாக, இந்தியா 32/3 என திணறியது. கேப்டன் ரிஷாப் பன்ட் அரைசதம் கடந்தார். படிதர் 28 ரன்னில் வீழ்ந்தார்.
மூன்றாவது நாள் முடிவில் இந்திய 'ஏ' அணி இரண்டாவது இன்னிங்சில் 119/4 ரன் எடுத்திருந்தது.
ஷாப் (64) அவுட்டாகாமல் இருந்தார். இன்று கடைசி நாள். கைவசம் 6 விக்கெட் வைத்துள்ள இந்திய 'ஏ' அணி வெற்றிக்கு 156 ரன் தேவைப்படுகின்றன.

