தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/70 வயது கிரிக்கெட் வீராங்கனை: சிலி 'டி-20' அணியில் அறிமுகம்

70 வயது கிரிக்கெட் வீராங்கனை: சிலி 'டி-20' அணியில் அறிமுகம்

70 வயது கிரிக்கெட் வீராங்கனை: சிலி 'டி-20' அணியில் அறிமுகம்


ADDED : செப் 27, 2026 11:16 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2026 11:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குவாசிமா: பேத்தி கேப்டனாக உள்ள சிலி 'டி-20' அணியில், 70 வயதான பாட்டி அறிமுகமானார்.

சிலி பெண்கள் 'டி-20' அணி கேப்டனாக கமிலா வில்டோசோலா ஓயார்ஸ் 22, உள்ளார். சமீபத்தில் (ஏப். 25, குவாசிமா) நடந்த சர்வதேச 'டி-20' போட்டியில் சிலி, கோஸ்டா ரிகா பெண்கள் அணிகள் மோதின. இப்போட்டிக்கான சிலி அணியில், கேப்டன் கமிலாவின் 70 வயதான பாட்டி இவோன் வில்டோசோலா அறிமுகமானார். இதன்மூலம் தற்போது விளையாடிக் கொண்டிருக்கும் மூத்த கிரிக்கெட் நட்சத்திரமானார் இவோன் வில்டோசோலா. தவிர இவர், ஒட்டுமொத்த கிரிக்கெட் அரங்கில் அறிமுகமான 2வது மூத்த நட்சத்திரமானார். ஏற்கனவே 1950-51ல் ராஜா மஹாராஜ் சிங், தனது 72வது வயதில் முதல் தர கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகி இருந்தார்.

இதுவரை விளையாடிய 2 சர்வதேச 'டி-20' போட்டியிலும், தனது பேத்தி கமிலாவுடன் துவக்க வீராங்கனையாக களமிறங்கிய இவோன் வில்டோசோலா 'டக்-அவுட்' ஆனார்.

கிரிக்கெட் ஆர்வம்: கடந்த 2019ல் முதன்முறையாக பிளாஸ்டிக் பேட், டென்னிஸ் பந்துகளை கொண்டு கிரிக்கெட் விளையாட துவங்கினார் இவோன் வில்டோசோலா. இவரது முயற்சிக்கு மகள் லோரெட்டோ, பேத்தி கமிலா, ஊக்கம் அளித்தனர். அப்போது சிலியில் நடந்த அம்மா-மகள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டியில் விளையாடினார். பின், பேத்தி உடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்ட இவோன் வில்டோசோலா, சமீபத்தில் சர்வதேச 'டி-20'ல் அறிமுகமானார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us